90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகல்!
பேருந்து கட்டணங்களை பாரியளவில் அதிகரிப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடல்!
இன்று 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகல்.
இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21) அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்
பேருந்து கட்டணங்களை பாரியளவில் அதிகரிப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடல்!
அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களும் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என தனியார் பேருந்து சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
இது நிலைமை குறித்து முடிவெடுப்பதற்காக பேருந்து சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (22) நடைபெறவுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்தின் படி, டீசல் விலை சுமார் 26% ஆல் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டமையால் பேருந்துத் தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன் காரணமாக, இம்முறை கண்டிப்பாக பேருந்துக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் பேருந்து உரிமையாளர்கள், இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.


