தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து இனிஷியல்சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை - ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!
தந்தையை இழந்த, தந்தையை பிரிந்து தாயின் பாதுகாப்பில், தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும் வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும்.
தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து இனிஷியல்சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை - ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!
திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழுக்காக மனுவில் குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தை பூர்த்தி செய்ய சொலலி கட்டாயப்பட்டுள்ளார்.
எனவே மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்ட போது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும் படி அறிவுறுத்த பட்டுளளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதில் தான் ஒற்றை பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற *மாண்புமிகு நீதிபதி M.S.ரமேஷ்* அவர்கள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அதிரடியாக வழங்கினார்.
அந்த தீர்ப்பில் தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையை பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை தந்தையுடைய வருமானம் இன்றி தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும் வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும் தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து இனிஷியல்சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும் பள்ளி சேர்க்கை & சொத்து பதிவு ஆகியவற்றிற்கும் இது பொருந்தும் என அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.


