நெதர்லாந்தின் லாண்ட்கிறாவ்- இரண்டாவது தடவையாக இனிய விழாவாய் முரசமதின் தெருவிழா,
முரசம் குழுவானது ஒவ்வொரு விடயங்களையும் பக்குவமாய் பார்த்துப்பார்த்து ஒழுங்கு செய்திருந்தமை பாராட்டத்தக்கது.

நெதர்லாந்தின் லாண்ட்கிறாவ் நகரில் 26.05.2024 அன்று இரண்டாவது தடவையாக இனிய விழாவாய் முரசமதின் தெருவிழா, பெருவிழாக்கோலம் பூண்டது. பாரிஸ் மண்ணின் கலைஞர்கள் ஒன்று கூட, மக்களின் ஆதரவோடு பாரம்பரிய எம் பறை ஒலியை தமிழர்களின் அடையாளப் பறையை அந்த பெரும் திடலை சுற்றி அரங்கம் அதிரமுரசத்தின் பெருவிழா ஆரம்பமானது .பறை இசை தந்த பாரிஸ் கலைஞர்களுக்கு எம் நன்றிகள். ஆடல், பாடல்கள் என சிறியவர்முதல் பெரியவர்வரை அரங்கத்தை அழகாய் அலங்கரித்திருந்தனர். முரசத்தின் சிறப்பம்சமாக பாரீஸ் கலைஞர்களின் "சிந்திக்க சிரிக்க" நாடகம் ஒன்று பன்முகக்கலைஞர் திரு. மயிலை இந்திரன் அவர்களும், கலைஞர் திரு. இரவி அவர்களும் சிறப்பாய் வெளிக்கொணர்ந்து எங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார்கள். புலம் பெயர்வாழ்வியலும்
வெளிநாடு வர ஆசைப்படுபவர் பற்றிய எண்ணங்களையும் தத்ரூபமாய் அவர்கள் பாணியில் எம்மை சிந்திக்க வைத்தமையும். நகைச்சுவையோடு காத்திரமான கருத்துக்களை அந்த மேடையில் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு எம் வாழ்த்துகளும் , நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இன்னுமொரு அம்சமாய் "சிகரம் தொட்ட தமிழன்" விருதுகட்டிக்கலைஞரும் , ஆலயத்தொண்டர்,கலைகளை நேசிப்பவர், கலைகளை ஊக்குவிப்பருமான திரு. குகன் செல்வராஜா அவர்களுக்கு முரசம் குழுவினரால் வழங்கப்பட்டது. தன்கடின முயற்சியினால் முன்னேற்றம் கண்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் திரு . குகன் செல்வராஜாவை முரசம் குழு வாழ்த்தி மகிழ்கிறது. இன்னு மொரு சிறப்பம்சமாய் Sla நிறுனத்தின் பெரும் பணி "போசாக்கு உணவுத்திட்டம்" தாயகத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவில் இருக்கும்
ஆரம்பப்பாடசாலையில் சிலவற்றில் தங்கள் பணியை மேற்கொண்டிருப்பதோடு அப்பணியின் செயற்பாடுகளை அன்றைய விழாவில் ஒளித்திரை மூலம் காண்பித்தும் இருந்தார்கள். உண்மையில் பாராட்டத்தக்க விடயம். புலம் பெயர்ந்தாலும் எம் மக்களின்மீதும் கரிசனம் கொண்டு பசி போக்கும் sla நிறுவனத்திற்கு நன்றி கலந்த பாராட்டுகள். அடுத்த அம்சமாய் இன்னிசை வார்ப்பாய் கானமழை கொண்டிருக்க இயற்கையின் சீரற்ற நிலை எம்மை தடுத்தி நிறுத்தியது. ஆனபோதிலும் நிகழ்சிகளை சீராக நாம் கொண்டு சென்றிருந்தோம். பொறுப்போடு செயலாற்றிய அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி.
முரசம் குழுவானது ஒவ்வொரு விடயங்களையும் பக்குவமாய் பார்த்துப்பார்த்து ஒழுங்கு செய்திருந்தமை பாராட்டத்தக்கது.
முரசம் –நெதர்லாந்து.