முல்லைத்தீவு கொக்கிளாய்–புளியமுனை சுற்றுலாத்துறை அபிவிருத்தி!
முல்லைத்தீவு கொக்கிளாய்–புளியமுனை சுற்றுலாத்தளம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி!
முல்லைத்தீவு கொக்கிளாய்–புளியமுனை சுற்றுலாத்துறை அபிவிருத்தி! முல்லைத்தீவு கொக்கிளாய்–புளியமுனை சுற்றுலாத்தளம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி!
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்னெடுப்பிலும், மாவட்ட அரச அதிபரின் அயராத உழைப்பினாலும் கொக்கிளாய்–புளியமுனை சுற்றுலாத்தளம் புதிய பரிமாணத்தை அடைந்து வருகிறது. இயற்கை அழகும் கடற்கரை வளமும் நிறைந்த இப்பகுதியை மேலும் சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கும் வகையில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வளர்ச்சியின் முக்கிய படியாக, சூரிய சக்தியில் இயங்கும் இரண்டு சூழல் நட்புப் படகுகள் இப்பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பாரம்பரிய எரிபொருளைப் பயன்படுத்தாத இந்தப் படகுகள் கடல் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.இந்தப் படகுகள் மூலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் அருகிலுள்ள தீவுப் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள இயற்கை எழில், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை நேரடியாகக் கண்டு ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் பயணிகளுக்கான அனுபவம் மேலும் மேம்படுவதுடன், இப்பகுதியின் தனித்துவமான சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. மாவட்ட அரச அதிபரின் தொடர்ச்சியான முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது. இதன் விளைவாக உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகளும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை வளத்தைப் பாதுகாத்துக்கொண்டே சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் இந்த முன்மாதிரித் திட்டம் எதிர்காலத்தில் மேலும் பல புதிய வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட உள்ளது.


