பெண் ஒருவரை தாக்கியமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபையின் உப தலைவர், அவரது மகன் இருவரும் பசறை பொலிஸாரால் கைது!
2 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு பசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
பெண் ஒருவரை தாக்கியமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் அவரது மகன் இருவரையும் பசறை பொலிஸார் கைது செய்து இன்றைய (9) தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது இருவரையும் 2 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் ஒருவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பசறை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் அவரது மகன், இன்றைய தினம் (9) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், 2 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு பசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள், பசறை எல்டப் பகுதியில் கடந்த மாதம் (30) இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பெண் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் 51 வயதுடைய தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபையின் உப தலைவர் சின்னையா நவராஜ் மற்றும் அவரது 24 வயதுடைய மகன் எனவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 30 ம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த உப தலைவர் மற்றும் அவரது மனைவி அன்றைய தினம் இரவே பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வாட்டு இலக்கம் 2 மற்றும் 5 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பசறை பிரதேச சபையின் உப தலைவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரிடமிருந்தும் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பசறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பிரதேச சபை உப தலைவர் மற்றும் அவரது மகன் இவ்வாறு இன்றைய தினம் (9) கைது செய்யப்பட்டு பசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபாப் பியரத்ன ஏகநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


