Breaking News
இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாண மாணவி லூட்சி றெஜினஸ்!
தெற்காசிய நாடுகளிற்கிடையிலான Under-18 கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியை சேர்ந்த மாணவி!
தெற்காசிய நாடுகளிற்கிடையிலான Under-18 பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியை சேர்ந்த மாணவி லூட்சி றெஜினஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான தெற்காசியமட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமாகாண பாடசாலை மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற போட்டியில் இந்தியாவுடன் மோதிய இலங்கை அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த மாணவியின் பயிற்சியாளராக தனுஷ் ராஜசோபனா அவர்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


