பாரதிராஜா உடலுக்கு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்களும் அஞ்சலி!
வத்தலக்குண்டு அருகே திரண்ட திரையுலகம்!
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா நேற்று (ஜூன் 10) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு 9 மணி வரை சென்னையில் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை அவரது சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று இரவு நீலாங்கரையில் இருந்து அவரது உடல் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், தேனியிலுள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, இன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தபடி, பாரதிராஜாவின் இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது.


