உக்ரைன் போர் களத்தில் கூலிப்படைகளாக மகிந்தவின் மெய்பாதுகாவலர். இருநாடுகளின் சார்பில் போரிடும் சிறீலங்கா இரணுவம் பலர் கொல்லப்பட்டுள்ளனர்
உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இரண்டு சிறீலங்கா இரணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போர் களத்தில் மகிந்தவின் மெய்பாதுகாவலர்: 15 பேர் கொண்ட குழுவை வழிநடத்தும் லஹிரு
இருநாடுகளின் சார்பில் போரிடும் சிறீலங்கா இரணுவம் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் முன்னாள் பிரமதர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த ஒருவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மே மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த லஹிரு காவிந்த அத்துருசிங்க என்பவரே உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போர் களத்தில் இருந்தவாறே இலங்கை ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியில் அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“உக்ரைன் படையில் வெளிநாட்டினரை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்ட குழுவின் தலைவராக செயற்படுகின்றேன். இந்த குழுவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்திருந்தேன். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் மெய்பாதுகாவலராக பணியாற்றினேன்.
மெய்பாதுகாவல் வழங்கிய அந்த காலப்பகுதியில் நடந்த எதையும் கூறமுடியாது. அது நெறியும் கிடையாது. தன்னை தனது குடும்பத்தில் ஒருவரைப் போலவே மகிந்த ராஜபக்ச பார்த்தார்.இந்நிலையில், எதிர்காலத்தில் செய்யவேண்டிய அனைத்தையும் இப்போதே திட்டமிட்டுள்ளேன். ரஷ்யாவுக்கு எதிரான போரில் இதுவரையில் காயம் எதுவும் ஏற்படவில்லை.போர் குறித்த அச்சங்களும் எனக்கில்லை. எனது குழு மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. எனக்கு எது நேர்ந்தாலும் அவர்கள் என்னை கைவிடமாட்டார்கள்.
அதேபோல் தனது குழுவில் உள்ள எவருக்கும் எது நடந்தாலும் முதல் ஆளாக நான் அங்கிருப்பேன்.சிறீலங்கா இராணுவத்தில் கற்றுக்கொண்ட நுட்பங்களை கொண்டு எனது குழுவினருக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றேன்.கடந்த எட்டு மாதங்களால் எந்தவொரு பாதிப்புகளும் இன்றி போர்களத்தில் செயற்பட்டு வருகின்றேன். வெளிநாட்டு இராணுவத்தில் இணைய வேண்டும் என்ற விருபத்தின் பேரிலேயே உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டேன்.நான் ஒருபோதும் கூலிப்படையாக இங்கு இணையவில்லை. எனது முழு விருப்பத்தின் பேரிலேயே உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டேன்.
எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்தில் இருந்து நான் அதிகாரப்பூர்வமாக விலகவில்லை. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட யாருக்கும் இந்த விடயம் தெரியாது.உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்கமுடியாது.அவ்வாறு கேட்டால் எதிரிநாட்டு படையினருடன் தொடர்புவைத்துள்ளதாக சந்தேகிப்பார்கள். எவ்வாறாயினும், அவர்கள் எங்களுக்கு எதிராக போரிட்டவர்கள் ஆவர்.
யாரும் ரஷ்யாவை பாதுகாக்கும் நோக்கில் அந்நாட்டு படையில் இணைந்து கொள்ளவில்லை. தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தேவையான பணத்திற்காகவே இணைந்துள்ளனர். 50 நாட்கள் போர்களத்தில் இருந்தால் 14 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால் நான் அந்த விடுமுறையை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் விதியை மீறி எதுவும் நடக்காது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.