Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளுக்குள் காணி உரிமையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் ஆக்கிரமித்திருந்த, வடக்கின் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. உரிமையாளர்கள் நுழைய மீண்டும் தடை.

கண்ணி வெடிகளுடன் கையளிக்கப்பட்ட காணிகள்; உரிமையாளர்கள் நுழைய மீண்டும் தடை.

வடக்குத் தமிழர்களுக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கும் அதிகமான காணிகளுக்குள் காணி உரிமையாளர்கள் நுழைய மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளில், சுமார் 20 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் காணப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல வருட காலமாக இலங்கை இராணுவம் ஆக்கிரமித்திருந்த, வடக்கின் தமிழர்களுக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்து விட்டன.

அதன்படி, தெல்லிப்பளையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணியில் 55,000 சதுர அடி பரப்பளவில் கண்ணிவெடிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் காரணமாக கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை காணிக்குள் நுழைய வட மாகாண ஆளுநர் அலுவலகம் முழுமையாக தடை விதித்துள்ளது.

இவ்வாறு காணிகள் விடுவிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்லஸ் மே மாதம் 07ஆம் திகதியன்று பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதேவேளை, இந்தக் காணிகள் கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக அரசாங்கப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியிருந்தனரா என்பதை வட மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்திருக்கவில்லை.

காணி விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், கண்ணிவெடிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தெல்லிப்பளை மற்றும் ஒட்டகபுலம் காணிகளின் தொழில்நுட்ப பரிசோதனை ஏற்கனவே மாவட்ட செயலகத்தினால் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.