Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பறவைக் காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம்?

.

 

உலகின் சில நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் பறவைக் காய்ச்சல் தொடர்பான அபாயகரமான சூழல் இல்லையென்றாலும் அது குறித்து அவதானமாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கை மக்களுக்கு இந்த வகையான நோய் ஆபத்து இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டும். உலக சுகாதார நிறுவனம் எங்களுக்கு எந்த சிறப்பு எச்சரிக்கையும் வழங்கவில்லை. பறவைக் காய்ச்சல் நிலைமை உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கு முன்பு பதிவாகிய போதும் அது தீவிரமாக பரவவில்லை. எனவே, இந்த விடயடம் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்” என்றார்