Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

நடுவானில், தனி விமானத்தில் பெண் விமானி… திடீரென மேலே திறந்த கதவு.

.

“ஆம்ஸ்டர்டாம்,நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் விமானி நரைன் மெல்கும்ஜன். 2 பேர் அமர கூடிய 330 எல்.எக்ஸ். ரக சிறிய விமானம் ஒன்றில் அவர் பயிற்சி பெறுவதற்காக பறந்து சென்றுள்ளார்.

அப்போது, விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் திடீரென அதன் மேல்கதவு திறந்து கொண்டது.  இதனால், பலத்த காற்று அவருடைய முகத்தில் வீசியது. இந்த அமளிக்கு இடையே அவரால், பயிற்சியாளரையும் சரிவர தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனினும், தொடர்ந்து பறக்க வேண்டும் என்ற அறிவுரையை நினைவுகூர்ந்து பின்பற்றி இருக்கிறார்.

அவர் கஷ்டப்பட்டு, அந்த விமானம் விபத்தில் சிக்கி விடாதபடி மெதுவாக கீழே பறந்து வந்து தரையிறங்கினார்.

இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது.விமானத்தில் பறப்பதற்கு முன் முறையாக பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், எல்லாம் சரியாக இருப்பது பற்றி பறப்பதற்கு முன் உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறி தன்னுடைய தவறை ஒப்பு கொண்டிருக்கிறார்.

அவருக்கு பார்ப்பதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. விமானத்தில் பறப்பது பற்றி பல வீடியோக்களை வெளியிடும் அவர், இது மற்ற விமானிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், அதனை விரைவாக பகிர்ந்து கொள்ளாததற்காக வருத்தமும் தெரிவித்து கொண்டார்.