Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஞாயிறன்று திருமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியை: புதனன்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு!

.

 

ஞாயிறன்று திருமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியை! – புதனன்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் இறுதிக்கிரியைகள் அவரது சொந்த இடமான திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அரச நிகழ்வாக நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கொழும்பு – பொரளையில் ஏ.எவ்.றேமண்ட் மலர்ச்சாலையில் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அங்கிருந்து அவரது பூதவுடல் நாளைமறுதினம் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு, அங்கு வைத்து அஞ்சலியும் மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.

அதன்பின்னர் பிற்பகல் 4 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.

இறுதிக் கிரியைகளை அரச நிகழ்வாக நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டாலும் சம்பந்தன் ஐயா குடும்பத்தின் மத காலாசார முறைப்படி அது முன்னெடுக்கப்படும் என்றும், அதன் காரணமாக வழமையாக அரச நிகழ்வாக முன்னெடுக்கப்படும் இறுதி நிகழ்வுகளில் இடம்பெறும் இராணுவ மரியாதை நிகழ்வுகள் இதில் இடம்பெறா என்றும் தெரிவிக்கப்பட்டது.