கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!
,
கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!
சுன்னாகம் பொலிஸார் பிரிவிற்கு உட்பட்ட ஊரெழு பகுதியில் நீண்ட நாட்களாக கசிப்பு வியாபாரம் இடம் பெற்று வந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று அதிரடி வேட்டையில் பொலிஸார் களம் இறங்கிய வேளையில் சுற்றி வளைக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
விசித்திரமான முறையில் விற்பனைக்காக கறிப்பையில் கசிப்பினை கட்டி விற்பனை செய்து வந்த 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை இலகுவான முறையில் விற்பனை செய்வதற்காக இந்தக் கறி பையை பயன்படுத்துவதாகவும். இதனால் எவருக்கும் சந்தேகம் ஏற்படாது என்றும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


