Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடிய இலங்கை இராணுவம், உக்ரைன் – ரஷ்யப் போரில் இரு தரப்பாக பிளவுபட்டு போரிடுகின்றனர்..

“இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுப் பெற்றவர்கள் மோசடியான முறையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்

புலிகளுக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவம் உக்ரைன் – ரஷ்யப் போரில் கூலிக்கு வேலை செய்யும் பரிதாபம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடிய இலங்கை இராணுவம், உக்ரைன் – ரஷ்யப் போரில் இரு தரப்பாக பிளவுபட்டு போரிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுப் பெற்றவர்கள் மோசடியான முறையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதில் பெரும் நிதி மோசடிகளும் இடம்பெறுகின்றன.

முகாம் உதவியாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய-உக்ரேனிய போரில் கூலிப்படைகளாக தள்ளப்படுகிறார்கள். இதில் பல இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் சிறந்த வீரர்களாக இருந்த பலர் உக்ரைன் – ரஷ்யப் போரில் கூலிப்படைகளாக செயற்படுகின்றனர்.

இலங்கை இராணுவம் இன்று இரண்டு தரப்புகளாக பிளவுபட்டுள்ளது. ஓய்வு பெற்ற நமது இராணுவ வீரர்களுக்கு சரியான வருமானம் இல்லாததால் இப்படி நடக்கின்றது.

ஏனெனில் இன்று உக்ரைன் – ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தின் ஓய்வுப் பெற்ற வீரர்கள் இரு தரப்பிலும் பிரிந்து இரு தரப்பிலும் இருந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாகப் போராடினோம். எனினும், இன்று நிலைமை வேறு விதமாக மாறியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.