Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இலங்கைத்தீவில் முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கூறியுள்ளர்.

மீண்டும் இனவாதத்தை கிளப்பும் அத்துரலியே ரத்தன தேரர்: முஸ்லிம்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுகிறார்.

மீண்டும் இனவாதத்தை கிளப்பும் அத்துரலியே ரத்தன தேரர்: முஸ்லிம்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுகிறார்.

இலங்கைத்தீவில் முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கூறியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் மவ்பிம என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை வெளியான அந்த நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியில் அத்துரலியே தேரர், இலங்கைத்தீவில் வாழும் முஸ்லிம் சமூகத்தைச் சந்தேகக் கண்ணோட்டத்தில் அவதானிக்கிறாா் என்பதை அறிய முடிகின்றது.

முஸ்லிம் மதரசா (Madrasa) பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இஸ்லாமியப் பாடநெறிகளை தேரர் முஸ்லிம் அடிப்படைவாதக் கல்வியாகவும் அக் கல்வி பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் துணை போகலாம் என்ற தொனியிலும் கருத்திட்டிருக்கிறார்.

அந்தச் செய்தியில் முஸ்லிம்கள் தொடர்பாகத் தேரர் சுட்டிக்காட்டிய விபரங்களை அப்படியே தருகின்றேன். அவை பின்வருமாறு,

‘ நாட்டில் பல இடங்களில் அடிப்படைவாத பாடசாலைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் நாம் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான கல்வியை வழங்குபவர்கள் யார்? சலுகைகளை வழங்குவது யார்? என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்‘