Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதில் பெரும் குழப்பம்: தமிழரசு கட்சியின் சிறப்பு குழு நாளை கூடுகின்றது

.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு நாளை வவுனியாவில் கூடவுள்ளது.

இதன்படி, மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் கூடி கலந்துரையாடவுள்ளனர்.

இந்த சந்திப்பு தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கத்தின் வவுனியா அலுவலகத்தில் கூடவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து அறிக்கை வெளியிடும் நோக்கில் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாளை கூடி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது முடிவுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதில் இலங்கை தமிழரசு கட்சிக்குள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி வவுனியாவில் கூடிய தமிரசு கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை ஆதரிப்பதாக கூறியிருந்தது.

எனினும், இந்த தீர்மானத்தை மறுத்திருந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மறுநாள் அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.

எனினும், நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசிய மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி தேர்தலில் ரணிலி வெற்றிபெற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், தமிழரசு கட்சியின் சி.சிறீதரன் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்க முடிவுசெய்துள்ளனர்.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குது என்பது தொடர்பில் தமிழரசு கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த குழப்பங்களை தணிக்கும் நோக்கில் நாளை சிறப்பு குழு கூடி இறுதி முடிவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் 14ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை எடுப்படும் தீர்மானம், மத்திய குழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.