Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பிரித்தானியாவில் காணாமல் போன இலங்கை இராணுவ அதிகாரி: எந்த தகவலும் இல்லை என அறிவிப்பு

.

பிரித்தானியாவில் காணாமல் போன இலங்கை இராணுவ அதிகாரியான மொஹமட் அனீக் எங்கிருக்கிறார் என்பது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் குறித்த விசாரணைகள் இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டள்ளது.

பிரித்தானியாவின் புகழ்பெற்ற Sandhurst இராணுவ அக்கடமியில் பயிற்சியை நிறைவு செய்து அண்மையில் வெளியேறிய இலங்கை கெடட் அதிகாரி இரண்டாம் லெப்டினன்ட் மொஹமட் அனீக்(Mohammad Aneek) நாடு திரும்பவில்லை.

குறித்த அதிகாரி 44 வார பயிற்சிக்குப் பிறகு ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி விடுவிக்கப்பட்டார். அத்தடன், ஓகஸ்ட் 11ஆம் திகதி அவர் இலங்கைக்கு வரவிருந்த போதிலும், அவர் திட்டமிடப்பட்ட விமானத்தில் திரும்பவில்லை.

அவர் நாடு திரும்புவதற்கான வசதிகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் செய்திருந்தது. எவ்வாறாயினும், அவர் திட்டமிட்ட விமான பயணத்திற்கு திரும்பியிருக்கவில்லை.

காணாமற்போன அதிகாரி மாவனல்லை இம்புல பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணாமல் போன இராணுவ அதிகாரியான மொஹமட் அனீக் எங்கிருக்கிறார் என்பது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.