Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி.. பலர் படுகாயம் – ஒரே வருடத்தில் 403 சம்பவங்கள்

.

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்களைப் பறித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அலபாமா மாகாணத்தில் இன்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் டசன் கணக்கான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆயுதமேந்திய மர்ம நபர்கள் நேற்று இரவு 11 மணியளவில் பிரம்பிங்கம் [Birmingham] மாவட்டத்தில் உள்ள பைவ் பாயிண்ட்ஸ் [Five Points] பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடைபாதையில் குண்டடிபட்டு மயக்கமாகக் கிடந்த இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணை பார்த்துள்ளனர். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் குண்டடிபட்ட மற்றொரு நபர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணியில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

அமெரிக்காவில் இந்த வருடம் மட்டும் இதுபோன்ற 403 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் [mass shootings] பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளில் இந்த ஒரே வருடத்தில் சுமார் 12,416 பேர் உயிரிழந்துள்ளதாக கன் வயலன்ஸ் ஆர்கைவ் [GVA] என்ற அமைப்பின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.