Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இலங்கை இராணுவத்தினர், ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்படுகின்றனர்.

உக்ரைன் – ரஷ்ய போரில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை.

உக்ரைன் – ரஷ்ய போரில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை: மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.

ரஷ்யா – உக்ரைன் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக இலங்கையர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் இலங்கைப் போராளிகள், குறிப்பாக முன்னாள் இராணுவத்தினர் சுரண்டப்பட்டு ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்படுவது குறித்து அண்மைக்காலமாக பெரிதும் பேசப்பட்டு வருகிறது.      இந்த நிலையில் சட்ட அமுலாக்க அதிகாரிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் போரில் மரணிக்க நேரிட்டதாகவும், அண்மையில் அவ்வாறு மரணித்தவர்களின் உடல்களை அடையாளப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலவரங்களின்படி, 60 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உக்ரைனில் வெவ்வேறு தளங்களில் பணிபுரிவதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரஷ்யாவில் பணிபுரிவதாகவும் தெரியவருகிறது.