Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

.

இந்தியாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆடவர் ஆசிய கோப்பையின் அடுத்த நான்கு சீசன்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சனிக்கிழமை (அக்டோபர் 5) ஏசிசி வெளியிட்ட 2024-2031 சுழற்சியின் ஊடக உரிமைகளுக்கான அழைப்புகளை வெளியிட்டதன் மூலம் இது தெரியவந்துள்ளது.கிரிக்பஸ்ஸில் இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, ஏசிசி 170 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊடக உரிமைகளுக்கான அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளது.இது ஒவ்வொரு ஆறு ஏசிசி போட்டிகளின் உலகளாவிய தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகளை உள்ளடக்கும்.இந்த ஆறு போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் ஆசிய கோப்பை, ஆடவர் மற்றும் மகளிர் யு-19 ஆசிய கோப்பை, ஆடவர் மற்றும் மகளிர் வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பை இடம்பெறும். 

அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் நடக்க உள்ள ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்த உள்ளது.இதன் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் மீண்டும் இந்தியாவிற்கு திரும்புகிறது.இந்தியா இதற்கு முன்பு, 1990/91இல் ஆடவர் ஆசியக் கோப்பையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 2025 ஆசிய கோப்பை முழுவதும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விளையாடப்பட உள்ளது.வங்கதேசம் 2027இல் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசிய கோப்பையை நடத்த உள்ளது.இதேபோல், 2029இல் பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் வடிவத்திலும், 2031இல் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலும் போட்டியை நடத்த உள்ளது.