Breaking News
தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா, தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார்!
.
தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா. தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா 11.10.2015யன்று தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். அவர் தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. மாறாக தனது சொத்தை எல்லாம் தமிழ் இனத்திற்காக செலவு செய்தார். அவர் தனக்கு எந்த பதவியையும் தேடிக்கொள்ளவில்லை. மாறாக தமிழ் இனத்திற்காக தனது உழைப்பையெல்லாம் கொடுத்தார். அவர் தனது இனத்திற்கு ஒருபோதும் துரோகம் இழைத்தவர் அல்லர். மாறாக தமிழ் இனத்திற்காக தன்னையே தியாகம் செய்தவர். அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் பதவிகளைப் பெற்றிருக்கலாம். சொகுசாக வாழ்ந்திருக்கலாம். எந்த நெருக்கடியிலும் அவர் தனது கொள்கைகளை விட்;டுக்கொடுக்கவில்லை. அதனால் அவரை கொடிய பயங்கரவாதி என்று இந்திய அரசு லிஸ்ட்டில் வைத்திருந்தது. அவர் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வசதியாக இருக்கின்றனர். அவர் விரும்பியிருந்தால் அவர்களிடம் உதவி பெற்று வசதியாக வாழ்ந்திருக்கமுடியும். அவர் இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மடிந்துள்ளார். அவருடைய தியாகம் ஒருபோதும் வீண்போகாது. வரலாறு அவரை நிச்சயம் நினைவில் கொள்ளும்.