Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தமிழ்க் கட்சிகளுடன் நாங்கள் பேசவில்லை; ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின்

.

வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தி எந்த கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை அமைப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஜே.வி.பி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது ரில்வின் சில்வா மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாங்கள் அவர்களுடன் பேசவில்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவே கூறினர். அவர்கள் இப்போது தேர்தலில் போட்டியிடுவதால் யாருக்கு ஆதரவு என்று தெரியாது. இந்த நேரத்தில் அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்த எங்களுக்கு எந்தத் தேவையும் கிடையாது. இதன்படி அவர்களுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.

இதேவேளை அரசாங்கத்தை அமைப்பதற்காக வேறு கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கின்றோம். இம்முறை தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றுக்கொள்வோம். இதனால் பாராளுமன்றத்தில் எவரின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.