Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்டாதீர்கள்!; சிங்கள அரசியல்வாதிகளுக்கு அநுர அரசு தக்க பதிலடி!

.

போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்துவது அடிப்படை மனித உரிமையாகும். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரித்து மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்ந்துள்ளார்கள்.

எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. மாவீரர் தினத்தை நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும்.’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும்போது அதற்கு எதிராக தெற்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.

அதேபோல் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தெற்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும்போது அதற்கு எதிராக வடக்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.

ஒவ்வொரு வருடமும் மே, நவம்பர் மாதங்களில் இத்தகைய இனவாதக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன. இந்த இனவாதக் கருத்துக்கள் இனியும் இருக்கக்கூடாது.

நினைவேந்தல் உரிமை சகல இனத்தவர்களுக்கும் உரியது. அதில் இன வேறுபாடு இருக்கக்கூடாது.

இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் எவரும் பார்க்கக்கூடாது.

நாட்டில் அமுலில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம்.

அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதேவேளை, சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அது பொலிஸாரின் கடமையாகும். – என்றார்.