Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

’13’ அடிப்படையில் அரசியல் தீர்வு விரைவில் கிடைக்கும்.

13வது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அந்தந்த மாகாண மக்கள் தமது அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியும்”

’13’ அடிப்படையில் அரசியல் தீர்வு விரைவில் கிடைக்கும்.

13வது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படை அடித்தளமாக அமைய வேண்டுமென நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து பேசியிருந்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தாம் நம்புவதாக” அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களின் ஆதரவு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 13வது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படை அடித்தளமாக அமைய வேண்டும் எனவும், அதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அந்தந்த மாகாண மக்கள் தமது அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியும்” எனவும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க முடியாமல் போனமை வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.