Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பிரித்தானியாவிற்குள் புலம்பெயரும் மக்களுக்கு பிரான்ஸ் விடுத்துள்ள கோரிக்கை.

.

ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் புலம்பெயர்வோரை தடுப்பதற்கு கூடுதல் நிதியை தர வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.பிரான்ஸின் உள்துறை அமைச்சர் புருனோ ரெடிலியோ (Bruno Retailleau) இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் கடலோரத்தில் பொலிஸாரின் ரோந்து பணியை அதிகரிக்கவே இந்த நிதி தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய பாதுகாப்பு படையணிக்கு மேலும் 175 பேர் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாவலர்களின் எண்ணிக்கை 800ஆக அதிகரிக்க உள்ளது.மேலும், புலம்பெயரும் மக்களால் ஏற்படும் சேதத்தை சரி செய்ய ஒரு இழப்பீட்டு நிதி உருவாக்கப்பட வேண்டும் என்றும் ரெடிலியோ தெரிவித்துள்ளார்.இவ்வாறான பின்னணியில், இந்த ஆண்டு மட்டும் 35,040 புலம்பெயர்ந்தோர் பிரான்ஸிலிருந்து சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குள் சென்றுள்ளனர்.