Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிக்கான வாய்ப்பை இழந்த இந்தியா! பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!

.

10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி இழந்துள்ளது.

சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 162 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் எட்டியது. டிராவிஸ் ஹட் 34 ரன்களுடனும் , பி வெப்ஸ்டர் 39 ரன்களுடனும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 - 3 என்ற வித்தியாசத்தில் இழந்துள்ளது. இந்த மொத்த தொடரிலும பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய அணி வென்றது.

சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் 3 வது நாளான இன்று 6 விக்கெட்டுகளுக்கு 141 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 4 விக்கெட்டுகளை 16 ரன்களுக்குள் கோட்டை விட்ட இந்திய அணி 2 வது இன்னிங்சில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களா பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலந்து ஆகியோர் போட்டி போட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்காட் போலந்து ஒரே இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 4 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ள நிலையில், தற்போது தொடரை இழந்தது.

ஸ்கோர் போர்டு

  ஆஸ்திரேலியா இந்தியா
முதல் இன்னிங்ஸ் 181 185
இரண்டாவது இன்னிங்ஸ் 157 (39.5 ஓவர்களில் ஆல் அவுட்) 162/4 (27 ஓவர்)

சிறந்த ரன் குவிப்பு

ரிஷப் பண்ட் (இந்தியா) - 61 ரன்

உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா) - 41 ரன்

டிராவிஸ் ஹட் (ஆஸ்திரேலியா) - 41 ரன் நாட் அவுட்

பீ வெப்ஸ்டர் (ஆஸ்திரேலியா) - 39 ரன் நாட் அவுட்

சிறந்த பந்து வீச்சு

ஸ்காட் போலாந்து (ஆஸ்திரேலியா) : 6/45

பிரசித் கிருஷ்ணா (இந்தியா) : 3/65