Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

வீதியில் நடந்து சென்ற மாணவியை கடத்திய கும்பல்; விசாரணை வேட்டையில் பொலிஸார்! கண்டியில் பரபரப்பு!

.

கண்டி மாவட்டம் - கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில்  பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 

ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை  கடத்திச் சென்றுள்ளனர்.

பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன்,  

அவரை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடத்தப்பட்ட சிறுமி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

எவ்வாறாயினும், கடத்தலில் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.