Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கனமழையால் அம்பாறையில் வயல் நிலங்கள் நாசம்

.

அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த  செவ்வாய்க்கிழமை (14)  திறந்து விடப்பட்ட நிலையிலும் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாக வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அம்பாறை மாவட்டத்தில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்  அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும்  வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  சவளக்கடை  கமநல சேவை நிலையத்திற்குட்பட்டு செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மை செய்கையில் 2000 ஏக்கருக்கும் அதிகமாக செய்கை பண்ணப்பட்டுள்ளன.

சவளக்கடை, அன்னமலை, வேப்பயடி, 5ஆம் கொலனி ,  போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக  சில   குளங்களின்  வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வேளாண்மை 70 நாட்கள் பயிராக காணப்படுவதனால், குடலைப்பருவத்தில் இருந்து கதிர்பருவத்திற்கு மாறும் இவ் வேளையில் இவ்வாறு குளங்களிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளததனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் தாம் பாதிக்கப்பட்டு மீண்டௌ முடியாத நிலையில் இருக்கும் வேளையில் இவ்வருட ஆரம்பத்திலேயே அடுத்த வெள்ளமும் தம்மை அதிகம் பாதித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இதேவேளை பெய்துவரும் மழை காரணமாக மூதூர் - கட்டைபறிச்சான் இரால் பாலத்திற்கு மேலால் இன்று காலையிலிருந்து வெள்ளநீர் பரவ ஆரம்பித்துள்ளது.

தற்போது ஒரு அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்து செல்வதோடு மழை அதிகரிக்கின்றபோது இறால் பாலத்தின் மேலால் பாய்ந்து செல்லும் நீரின் அளவும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.