Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மட்டக்களப்பில் கப்பம் கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜர்!

இராணுவ மேஜர் ஒருவர் 3 இலட்சம் ரூபா கப்பமாக தருமாறும் இல்லாவிடில் போதை பொருள் வைத்து மனைவியையும் தன்னையும் தூக்குவதாக மிரட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் கப்பம் கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜர்!

மட்டக்களப்பில் நபர் ஒருவரிடம் கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் 3 இலட்சம் ரூபா கப்பமாக தருமாறும் இல்லாவிடில் போதை பொருள் வைத்து மனைவியையும் தன்னையும் தூக்கி சென்று இல்லாமல் செய்ய போவதாக அச்சுறுத்தி மிரட்டிவருவதாக பாதிக்கப்பட்டவர் 6 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரிய வருவதாவது,

மட்டக்களப்பைச் சேர்ந்த ரங்கன் என அழைக்கப்படும் சாமித்தம்பி வேலாயுதம் என்பவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் இடைத்தரகராக கல்முனையைச் சேர்ந்த ஒருவரிடம் 5 இலட்சம் 70,000 ரூபாவையும் அதனுடன் 5 பேரிடம் பணத்தை வாங்கி அதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஏமாற்றி வந்த நிலையில் அவருக்கு எதிராக இடைத்தரகர் கல்முனையைச் சேர்ந்த நபரின் சாட்சியுடன் மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அந்த வேலைவாய்ப்பு முகவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்த பின்னணியில் கல்முனை இராணுவ முகாம் மேஜர் இடைத்தரகரான ரங்கனிடம் கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கல்மனையில் உள்ள நபரிடம் வாங்கிய பணத்தை தன்னிடம் தருமாறும் உடன் 3 இலட்சம் ரூபாவை தனது வங்கி கணக்கிற்கு போடுமாறு கப்பம் கோரியதுடன் பணம் தர மறுத்தால் போதை பொருள் வீட்டில் வைத்து மனைவியையும் உன்னையும் தூக்கி கொண்டு சென்று இல்லாமல் செய்வேன், 4 ஆம் மாடிக்கு அனுப்புவேன், நான் கொழும்பில் பெரிய பின்னணியைச் சேர்ந்தவன் விளையாடக் கூடாது என அச்சுறுத்தல் விடுத்துள்ளர்,

இதனையடுத்து குறித்த இராணுவ மேஜர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு இடைத்தரகரான ரங்கன் 30 ஆயிரம் ரூபாவை கப்பமாக அனுப்பியுள்ளதாகவும் தொடர்ந்து இராணுவ மேஜர் கையடக்க தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரி வருவதாகவும் எனக்கும் எனது மனைவிக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர். முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் குறித்த இராணுவ அதிகாரியை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் இராணுவ மேஜருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை நேற்று (07) செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.