Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 'த நெயில்' சஞ்சிகை வெளியீடு

,

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான 'த நெயில்' (The Nail) சஞ்சிகை வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை காலை  இடம்பெற்றது. 

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்பு விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். 

ஆளுநர் தனது உரையில்,

முன்னைய காலங்களில் பொறியியலாளர்கள் பலர் இந்த மாகாணத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருந்தாலும் அவர்களின் அந்தக் கடின உழைப்புப்பற்றி எந்தவொரு ஆவணங்களும் எங்களிடம் இல்லை. 

குறிப்பாக நாங்கள் அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்துக்கான ஆறு என்ற அடிப்படையில் ஆறுமுகம் திட்டம் தொடர்பில் பேசி வந்தாலும், அது தொடர்பில் முறையான – முழமையான ஆவணங்கள் எங்களிடம் இல்லை. 

ஆனால் தற்போது வெளியிடப்படும் 'த நெயில்' சஞ்சிகை ஊடாக பொறியிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அனுபவங்கள் அனைவருக்கும் பகிரப்படுகின்றது. இது சிறப்பான முயற்சி. பாராட்டப்படவேண்டியது.

சவால்களை எதிர்கொள்ளாவிட்டால் எங்களின் ஆளுமையை விருத்தி செய்ய முடியாது. சவால்களை எதிர்கொள்ளும்போதுதான் அந்தச் சவால்களை நாங்கள் வெற்றிகொள்கின்றோம். 

அதன் ஊடாக எங்கள் ஆளுமைகளை மேலும் விருத்தியடையச் செய்துகொள்ளலாம். மிகப்பரந்துபட்ட அனுபவமானது எழுத்துமூலமான போதனையைவிட மேம்பட்டது. 

மாணவர்களின் புத்தாக்க சிந்தனைக்கும் இடமளிக்கும் வகையில் அவர்களுடைய ஆக்கங்களையும் இந்த சஞ்சிகையில் உள்வாங்கியமை சிறப்பம்சமாகும். 

புத்தகக் கல்விக்கு அப்பால் பரிசோதனைகள் - பயிற்சிகள் மாணவர்களுக்கு முக்கியம். அது இல்லாமல் அவர்களது அறிவு முழுமையடையாது, என ஆளுநர் குறிப்பிட்டார்.