Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கனடாவின் எரிபொருள் தேவையில்லை - ட்ரம்ப்

,

கனடாவின் எரிபொருள் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய், எரிவாயு, வாகனங்கள் போன்ற எதுவுமே தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவுடன் செயல்படுவது மிகுந்த சவால் மிக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் காணொளி தொழில்நுட்பம் மூலம் பங்கேற்று உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

எங்களது கார்களை கனடியர்கள் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்

கனடாவை விடவும் உலகில் ஏனைய நாடுகளை விடவும் அமெரிக்காவிடம் கூடுதல் எண்ணிக்கையில் எரிபொருட்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

25 வீத வரியிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அமெரிக்காவுடன் கனடா இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் வரி விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.