Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மீண்டும் மக்களை கொன்று குவித்து காட்டும் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஜே.வி.பி.

1988/89 காலப்பகுதியில் ஜே.வி.பி மக்களைக் கொன்று கிராமங்களில் காட்டுச் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது?

மீண்டும் மக்களை கொன்று குவித்து காட்டும் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஜே.வி.பி.

தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதி அதிகாரங்களை வழங்குவோம் என ஜே.வி.பி.யினர் தெரிவித்த கூற்று 1988/89 காலப்பகுதியில் ஜே.வி.பி மக்களைக் கொன்று கிராமங்களில் காட்டுச் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பதை மீண்டும் மக்களுக்கு நன்றாக நினைவுபடுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலத்தில் ஜே.வி.பி கிராமத்துக்குச் சட்டத்தைக் கொண்டு வந்து அப்பாவி மக்களின் கை, கால்களை வெட்டி கொலை செய்தது. அந்த குழுக்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுத்தால், அந்த பயங்கரமான சகாப்தம் மீண்டும் பிறக்கும் என கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுக்களை நடத்துகிறார். ஆனால் அனுரகுமார என்ன செய்கிறார் என்பதை வெளிநாட்டுக்கு சென்று கண்டுபிடியுங்கள். வெளிநாட்டுக்கு சென்று கட்சிக்கு கொடுக்கும் பணத்தை தனதுபாக்கெட்டில் கொண்டு வந்து விடுகிறார்.

எனவே இந்தக் கதையை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆட்சியைப் பெறுவதற்காக கொலை செய்தவர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகும் அதே திட்டத்தைச் செய்ய முயற்சிக்கின்றனர்.

இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் இல்லாமல் இப்படியே இருப்போம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி அவ்வாறு செய்ய முடியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். தொலைநோக்கு பார்வை இல்லாதவர்களுக்கு நாட்டின் நிர்வாகத்தை கொடுக்காதீர்கள்” என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.