Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தலைமன்னார் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு!

160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை

தலைமன்னார் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா, பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு இடம் பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த காணிக்கான சுற்று வேலி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் குறித்த காணியின் உரிமையாளர்கள் அங்கு சென்ற நிலையில் பொலிஸார் கைது செய்வோம் என அச்சுரூத்துவதாகவும் அடாவடித்தனத்துடன் காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது பூர்வீக காணிகளே அடாத்தாக பிடிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்விடயம் குறித்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.

இதனால் எமது சமூகமும் பாரிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். பனை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பனை மரங்கள் உள்ள காணி அபகரிக்கப்பட்டு பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகிறது.

தற்போது எமது வாழ்வாதாரத்திற்கான பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மணல் அகழ்வுக்காக குறித்த காணியை விற்பனை செய்துள்ள நிலையில் தற்போது எங்களை உள்ளே நுழைய விடாது காணிக்கு சுற்று வேலி அடைக்கப்பட்டு வருகின்றது.

எனவே உரிய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு எமக்கு எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.