Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இந்தியாவில் மட்டுமல்ல ஈழத்திலும் ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழ்த் தேசியத்தை எதிர்க்கும்.

,

இந்தியாவில் மட்டுமல்ல ஈழத்திலும் ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழ்த் தேசியத்தை எதிர்க்கும்.

ஆரியம் காந்தி சிலை நிறுவும் திராவிடம் பெரியார் சிலை நிறுவும் இரண்டும் சேர்ந்து சிங்கள அரசு அமைக்கும் சட்டவிரோத புத்தர் சிலையை ஆதரிக்கும். 

திருகோணமலை ஸ்ரீ மலை நீலியம்மன் கோவிலை தீயிட்டு அழித்து விட்டு குறித்த கோவில் வளாகத்தில் "பாசன பப்பாதராஜமஹா விகாரை" என்கிற பௌத்த ஆலயம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள்

திருகோணமலை முகத்துவாராம் பிரதேசத்தில் குஞ்சுமப்ப பெரியசாமி கோவிலை அழித்து அந்த கோவில் சூழலில் "லங்காபட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை ஒன்றை கட்டி இருக்கின்றார்கள்

காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலய சூழலில் "கெமுனு விகாரை" என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவிஇருக்கிறார்கள்

முல்ல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் சூலத்தை உடைத்து வீசிவிட்டு அங்கு "குறுந்தூர் விகாரை" என்கின்ற பெயரில் விகாரை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள்

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி "குருகந்த புராண ராஜ மகா விகாரை" என்கின்ற பேரில்விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்

வவுனியா வெடுக்குநாறி மலை சிவன் ஆலய விக்கிரங்களை சேதப்படுத்தி அது "வட்டமான பர்வத விகாரை" என்கின்றபௌத்த தொல்லியல் நிலம் என உரிமை கோருகின்றார்கள்

தென்னவன்மரபடி கந்தசாமி மலை முருகன் ஆலய பூசை வழிபாடுகளை தடை செய்து விட்டு அது "சங்கமலை விகாரை" க்குரிய நிலம் என உரிமை கோருகின்றார்கள்

திருகோணமலை 64 ஆம் கட்டை ராஜவந்தான்மலை பிள்ளையார் ஆலயத்தை சிதைத்து விட்டு அங்கு "கொட்டியாராம ஸ்ரீபத்ர தாது ராஜ மகா விகாரை" என்கின்ற பெயரில் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்

திருகோணமலை சூடைக்குடா மலை குன்றத்தூர் முருகன் ஆலயத்தை அழித்து அங்கும் விகாரையொன்றைகட்டியிருக்கின்றார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலமலை சைவ குமரன் ஆலயத்தின் பாரம்பரிய முன் கதவு , மூலஸ்தான விக்கிரம்என்பவற்றை அடித்து நொருக்கியிருக்கின்றார்கள்

வவுனியா பூவரசங்குளம் மலையிலிருந்த பிள்ளையார் சிலை, சூலம் என்பனவற்றை சேதப்படுத்தப்படுத்தியிருக்கின்றார்கள் .