Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உக்ரைன் – ரஷ்ய போரில் மேலும் 14 சிறிலங்கா இராணுவத்தினர் பலி.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்ய போரில் மேலும் 14 சிறிலங்கா இராணுவத்தினர்  பலி.

உக்ரைன் – ரஷ்ய போரில் மேலும் 14 சிறிலங்கா இராணுவத்தினர்  உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் உக்ரைன் – ரஷ்ய போரில் கூலிப்படையாக செயற்படுவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

போலியான வாக்குறுதிகள் மூலம் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் போர் களத்தில் கூலிப்படையாக ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் சுமார் எட்டு இலங்கையர்கள் போரில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.இதன்படி, மேலும் 14 இலங்கையர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறித்த அதிகாரியை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில், இலங்கையர்களை மோசடியான முறையில் அழைததுச் சென்ற மற்றுமொரு முகவரும் மாவனெல்லையில் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த மோசடியில் சிக்கியவர்களின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இலங்கை படையின் ஓய்வுபெற்ற ஒன்பது இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் (ஆட்கடத்தல்) ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் போருக்கு இலங்கையர்களை சட்டவிரோதமாக அனுப்பியமை தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட பிரிவை நிறுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.