Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மோடி வருகையின்போது கூடாரங்கள், சாலை பள்ளங்களை அகற்றினேன்-டிரம்ப்.

"நாங்கள் இந்த வாஷிங்டன் நகரை சுத்தம் செய்து வருகிறோம்".

இந்திய பிரதமர் மோடி வருகையின்போது கூடாரங்கள், சாலை பள்ளங்களை அகற்றினேன் என்று டொனால்டு டிரம்ப் கூறினார்.

மெரிக்காவின் தலைநகர் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை, நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், வாஷிங்டனில் அரசு கட்டிடங்கள் அருகே உள்ள கூடாரங்கள், சாலை பள்ளங்கள் உள்ளிட்டவற்றை அகற்றவும் சுவர்களில் கிறுக்கப்பட்ட எழுத்துகள், ஓவியங்கள் ஆகியவற்றை அழிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நேற்று வெள்ளைமாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் இதுப்பற்றி பேசுகையில், "நாங்கள் இந்த நகரை (வாஷிங்டன்) சுத்தம் செய்து வருகிறோம். பிரதமர் நரேந்திரமோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் அமெரிக்கா வந்தபோது, அவர்கள் கூடாரங்களையோ, சாலை பள்ளங்களையோ, சுவர்களில் கிறுக்கப்பட்டதையோ பார்க்க நான் விரும்பவில்லை. எனவே அவர்களின் வருகையின்போது வெள்ளை மாளிகைக்கு அருகில் இருந்த கூடாரங்கள், சாலை பள்ளங்கள் மற்றும் சுவர்களில் கிறுக்கப்பட்டதை அவசர கதியில் அகற்ற உத்தரவிட்டேன்" எனக் கூறினார்.