Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

முறையான தூக்கமின்மை ஏற்படுத்தும் ஆபத்துகள்! செல்போன் வருகை, பல்வேறு செயலிகள் தூக்கத்தை இழக்கச் செய்து விட்டன.

இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

நவீன உலகத்தில் வாழும் மனிதர்கள் இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு மிக முக்கிய அடிப்படை காரணமே முறையான தூக்கமின்மை தான், மனிதர்கள் சீரான தூக்க தூங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல், மார்ச் 14ஆம் தேதி World Sleep Day அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பிறந்த குழந்தையாக இருக்கும் பொழுது 10- 11 மணி நேரம் தூங்குவார்கள், அதன்பின் 7 முதல் 8 மணிநேரம் சீரான தூக்கம், 60 வயதை கடந்த பிறகு இந்த தூக்கம் 6 முதல் 5 மணி நேரமாக குறையும்.

கடந்த 1980ஆம் ஆண்டு வரை கூட, சூரியன் அஸ்தமித்த உடன் மக்கள் உறங்கச் சென்று விடுவார்கள், அவர்களுக்கு தியேட்டர்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்கு அதனைத் தாண்டி எந்த பொழுதுபோக்குமில்லை. வேலை, தூக்கம், நண்பர்கள் என வாழ்ந்தார்கள்.

1990-களின் பிற்பகுதியில் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியால், எல்லா வீட்டுகளுக்கும் தொலைக்காட்சி அத்தியாவசிய பொருளாக மாறியது. அது மக்கள் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

ஆண்ட்ராய்டு செல்போன் வருகை மொத்தமாக மனிதர்களின் தூக்கத்தை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. குறிப்பாக ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் ஃபீட், வாட்ஸ் ஆப், ஸ்டேட்ஸ் என பல்வேறு செயலிகள் மனிதனின் தூக்கத்தை இழக்கச் செய்து விட்டன. இது மட்டுமல்லாமல், இரவு நேர பார்ட்டி, அவுடிங், சாப்பாடு சாப்பிடுவது, மதுப்பழக்கம் என வாழ்க்கை முறை மாறிக் கொண்டே வருகிறது.

முறையற்ற தூக்கம் இருந்தால் இருதயக் கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும், அதுமட்டுமல்லாமல் வீட்டில் பிரச்னை, வேலை பார்க்கும் இடத்தில் கோபம் என மனம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, அதீத மன அழுத்ததிற்கு வித்திடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இப்போது வாழும் 50% பேருக்கு தூக்கம் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டு மனநல சார்ந்த பாதிப்புகள் இருக்கின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது அல்லது மருத்துவரை அணுகி இதற்கு தீர்வு காணலாம்.

மனிதர்களின் செயல்பாடு முற்றிலுமாக இயற்கைக்கு எதிராக இருப்பதால் எதிர்காலத்தில் தூக்கம் சார்ந்த பிரச்னைகளுக்காக ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உதயமாகலாம்.

குதிரை, நாய், பறவைகள் சரியான நேரத்தில் தூங்கச் சென்று விடும் ஆனால் மனிதன் அதற்கு எதிராக செயல்படுகிறான். இரவு நேர வேலை செய்பவர்கள், காலையில் முழுமையாக தூங்க வேண்டும்.

ஆனால் அதனை செய்வதில்லை இது அவர்களது வேலையில் பல்வேறு சிக்கல்களை கொண்டு சேர்க்கும் எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.