Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உலகில் இப்பொழுதுள்ள மிகப்பெரிய பீரங்கிகள் ஐந்து.

வரிசை படுத்தினால் தஞ்சை ராஜகோபால பீரங்கியே உலகின் மிகப்பெரிய பீரங்கி என்பது உறுதியாகும்

இந்தியாவை  அடிமைப் படுத்தியதில் இஅன்னியர்கள் கொண்டு வந்த பீரங்கி என்ற ராக்ஷச ஆயுதத்திற்குப் பெரும் பங்கு உண்டு.உலகில் இப்பொழுதுள்ள மிகப்பெரிய பீரங்கிகள்  ஐந்து.
அவைஇ சீனா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ளன.இந்தியாவில் உள்ளவை இரண்டு, ஒன்று ஜெய்பூர் ஜெய்கார் கோட்டையிலும் ,  இன்னொன்று தஞ்சையிலும் உள்ளன.
இவற்றில் மிகப் பெரிய பீரங்கியாக கின்னசில் இடம் பிடித்து இருப்பது, சீனாவில் உள்ள ஹூலிஷன் பீரங்கி,  ஜெர்மனில் 1896 ல் செய்யப்பட்டது, பீரங்கி எடையை தனியே கணக்கிட்டால் 25 டன்னுக்கு மிகாது.
இரண்டாவது இடத்தில ராஜஸ்தானில் , உள்ள ஜெய்கார் கோட்டை ஜெய்வானா பீரங்கி.1720ல் செய்யப்பட்டது.இதன் மொத்த எடை 50 என்றாலும், பீரங்கி   மட்டும் 25 டன்னுக்குள்தான் இருக்கும்.
மூன்றாவது இடத்தில் உள்ளத்து, ரஷ்யாவின் ஜார் புஷ்கா பீரங்கி.கி.பி 1586ல் செய்யப்பட இதன் மொத்த எடை, 42 டன் என்றாலும் பீரங்கி மட்டும் 25 டன்னுக்குள் தான் இருக்கும்.
லண்டனில் உள்ள  டார்டனல் பீரங்கி நான்காவது இடத்தில. இது துருக்கியரால் 1453 இல் செய்யப்பட்டது. பீரங்கி வண்டியுடன்  சேர்த்து 42 டன் என்று சொல்லப்பட்டாலும், பீரங்கி எடை மட்டும் 20 டன்னுக்கு மிகாது.
ஐந்தாவது இடத்தில நம் தஞ்சாவூர் ராஜகோபால பீரங்கி உள்ளது, ( இதையாவது ஒத்துக்கொண்டார்களே!) தஞ்சை கீழவாசல் பகுதியில் தாஸ் மேடு என்ற இடத்தில உள்ளது, தஞ்சை கோட்டையில் மிக உயரமான இடமும் இதுதான்.கல்லாலும் மண்ணாலும் உருவாக்கப்பட்ட இந்த மேடு 60 அடி  உயரமிருக்கும்.தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்கர் (கி.பி.1600-1635 ) காலத்தில் செய்யப்பட்டது. இம்மன்னனின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி பெயர் இப் பீரங்கிக்கு இடப்பட்டதாகத் தெரிகிறது.பீரங்கி மட்டுமே உள்ளது. இதன் எடை 22 டன்.400 ஆண்டு  கால தஞ்சையின் வரலாற்றோடுஇ வானமே கூரையாக  மழை வெயிலையும் தாங்கிய  இந்த பீரங்கிஇ துரும்பு பிடிக்காமல் இருப்பது, தஞ்சை
Blacksmith களின் திறமைக்கு சான்றாக உள்ளது.
முதல் நான்கு வரிசையில் உள்ளவை, வார்ப்பு முறையில் செய்யப்பட்டவை, தஞ்சை பீரங்கி
hand made, வார்ப்பு  இரும்பில் வார்க்கப்பட்டது அல்ல.  தேனிரும்பால் உருவாக்காப்பட்டது. இந்த பீரங்கி அறிவியல் பூர்வமாக ஆய்வு  செய்யப்பட்டுள்ளது. இதன் காலம்,  நீளம், எடை, பயன்படுத்தப்பட்ட மூலபொருள், தாக்கும் திறன், செய்தொழில் நுட்பம், செய் நேர்த்தி, இவற்றை எல்லாம் ஒப்பிட்டு metallurgy experts   ஆய்வு செய்து,  வரிசை படுத்தினால், தஞ்சை ராஜகோபால பீரங்கியே உலகின் மிகப்பெரிய பீரங்கி என்பது உறுதியாகும்.
இது இந்திய தொல்லியல் துறை பராமரிப்பிலும் கட்டுப்பாட்டிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம்.