Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பலதும் பத்தும்:- 19,04,2025 - கைமாறும் கதிர்காமம்!

யாழ்ப்பாணம் இரண்டு சந்தேக நபர்கள் கஞ்சாவுடன் கைது!

யாழ்ப்பாணம்  இரண்டு சந்தேக நபர்கள் கஞ்சாவுடன் கைது!

யாழ்ப்பாணம் தட்டா தெரு பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து 52gகஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ர  பொலிஸ் அதிகாரி அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போதுசந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைமாறும்  கதிர்காமம்

இவ்வருட 2025 ஆண்டு  கதிர்காம திருவிழா ஜூலை 26ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டுஆகஸ்ட் 9ம் திகதி சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148

கொங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆகஉயர்ந்துள்ளதோடு மேலும் 100 பேர் காணாமலாகியுள்ளனர்.

யுனெஸ்கோ

யுனெஸ்கோ உலக நினைவக பதிவேட்டில்  பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இணைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்டகருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு ஆணைக்குழு ஊடகவுள்ளது.

ஜனாதிபதி கடந்த நாளொன்றில் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சிநிறுவனங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக வெளியிட்ட கருத்து தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள்கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. அதன்படி, இந்தப் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதி ஜெயந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நேற்றுக் கைது செய்துள்ளனர். கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பானவிசாரணைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பிலேயே பிள்ளையானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பிலிருந்து வந்த சிஐடி அதிகாரிகள், வாழைச்சேனையில் உள்ளஅவரது வீட்டில் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இஸ்ரேலின் பல பகுதிகளில், இன்று முதல் 26ஆம் திகதி வரை அங்கிருக்கும் இலங்கையர்களினால் புத்தாண்டுகொண்டாட்டங்கள்
உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இலங்கையர்கள் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யேமனில் ஹவுதி பயங்கரவாத அமைப்பால் ஏவப்பட்ட பல ஏவுகணைத் தாக்குதல்களை, இஸ்ரேலியபாதுகாப்புப்
படைகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால், யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீதுதாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.