Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ்  நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  மே 18 அன்று பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் றிபப்ளிக் என்னும் இடத்தில்  அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை அருகில் இருந்து தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு பேரணியாக பஸ்ரில்  என்னும் இடத்தை நோக்கி சென்றடைந்து.  

சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களும் அந்தச் சம்பவங்களில் நேரடியாக கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்களும் அதில் பங்கெடுத்த போராளிகள் என பல தரப்பினரும் இந்த உணர்வுபூர்வமான நினைவேந்தலில் பங்கெடுத்துக் கொண்டனர் 

தமிழர் ஒருங்கிணைப்புக்   குழுவினரால்  ஒழுங்கமைக்கப்பட்ட  நினைவேந்தலானது பல உப அமைப்புகளின் உதவியோடு பெரும் திரளான வலிசுமந்த  மக்களின் உருக்கமான உணர்வுகளுடன் மலர்தூவி இழந்தோரை  மனதில் நிறுத்தி  நினைவு வணக்க நிகழ்வுகள் பேர் எழுச்சியாக  நிறைவு பெற்றது