Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி, ஒற்றுமை தமிழ் மக்களிடம், தமிழ் கட்சிகளிடம் இல்லை. ரணில்!

விக்னேஸ்வரன் இல்லத்தில் நேரில் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க .

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் ஒற்றுமை தமிழ் மக்களிடமோ – தமிழ் கட்சிகளிடமோ : விக்கியிடம் ஜனாதிபதி ரணில் நேரில் தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ அல்லது தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (25) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் இல்லத்தில் அவரை நேரில் சென்று சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி என்னை சந்திக்க வரப்போகிறார் என அறிந்த அரசியல் நீதியான தீர்மானம் எடுக்கப்படும் என சிந்தித்தார்கள். அவர் என்னை சுகம் விசாரிப்பதற்காகவே வந்தார் அரசியல் நீதியான தீர்மானங்களுககான சந்திப்பாக அமையவில்லை.

சந்திப்பில் பொது வேட்பாளர், ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடிய நிலையில் அவரது அநேகமான கருத்துக்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக நாடு பூராக நடைமுறைப்படுத்தும் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலேயே பேசினார்.

இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகிறீர்கள் அது சாத்தியப்படாது என கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை என்பதை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய மாட்டார்கள் என்றார்.

நான் சிரித்தவாறே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை கூறினேன். அத்தோடு இரண்டாம் மூன்றாம் வாக்குகளை வழங்குவது தொடர்பிலும் அவரிடம் கூறினேன்.

இரண்டாம் மூன்றாம் வாக்கு வழங்கும் நடைமுறையை அவர் ஏற்றுக் கொண்டார். பொது வேட்பாளர் தெரிவு அதற்கான கட்டமைப்பினர் மேற்கொள்வார்கள் அதன் தெரிவை பார்ப்போம் என்றேன் என்றார்.