Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை: ஷீன் (Shein) செயலிக்கு ஆப்பு வைக்குமா பிரான்ஸ்?

பிரபல சீன விற்பனை நிறுவனமான ஷீன் (Shein), இப்போது பிரான்சில் ஒரு மிகப் பெரிய சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை: ஷீன் (Shein) செயலிக்கு ஆப்பு வைக்குமா பிரான்ஸ்?
பிரபல சீன  விற்பனை நிறுவனமான ஷீன் (Shein), இப்போது பிரான்சில் ஒரு மிகப் பெரிய சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் ஒன்லைன் தளத்தை (platform) பிரான்சில் முற்றிலுமாக முடக்க வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பரபரப்பான வழக்கு, வரும் நவம்பர் 26 ஆம் திகதி பாரிஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த விவகாரத்தின் பின்னணி மிகவும் அதிர்ச்சிகரமானது. ஷீன் தளத்தில், குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சித்தரிக்கும் பொம்மைகள் (pedopornographic dolls) மற்றும் மிக ஆபத்தான 'பிரிவு A' (Category A) ஆயுதங்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைக் கண்டு கொந்தளித்த பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, நவம்பர் 5 ஆம் திகதி ஷீன் நிறுவனத்திற்கு 48 மணி நேர கெடு விதித்தார். அந்தச் சட்டவிரோத பொருட்களை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கடுமையாக உத்தரவிட்டார்.

அவரின்  உத்தரவுக்குப் பணிந்து, நவம்பர் 7 ஆம் திகதிக்குள் ஷீன் அந்தப் பொருட்களைத் தனது தளத்திலிருந்து அகற்றிவிட்டது. இத்துடன் பிரச்சனை முடிந்தது என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால், அங்கேதான் ஒரு பெரிய திருப்பம்! பொருட்களை நீக்கியபிறகும், ஷீன் தளத்தை இடைநீக்கம் செய்யும் சட்ட நடவடிக்கையைக் கைவிடப் போவதில்லை என்று பிரதமர் லெகோர்னு திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இதற்கு உள்துறை அமைச்சகம் கூறிய காரணம்: "ஷீன் நிறுவனத்தின் தொடர்ச்சியான மற்றும் பலகீனமான தவறுகளால், நாட்டின் பொது ஒழுங்கிற்கு கடுமையான பாதிப்பு" ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒருமுறை தவறு செய்து திருத்திக் கொண்டாலும், மீண்டும் மீண்டும் இதுபோல நடப்பதை அனுமதிக்க முடியாது என்பதில் பிரெஞ்சு அரசாங்கம் உறுதியாக உள்ளது.
பிரான்சில் தனது முதல் நேரடி கடையை (physical store) நவம்பர் 5 ஆம் திகதி ஷீன் திறந்த சமயத்தில், இந்த மெகா ஊழல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஷீன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாகவும், தர்மசங்கடமாகவும் அமைந்துள்ளது.
நவம்பர் 26 அன்று நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறது என்பதை பிரான்ஸ் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஷீன் வாடிக்கையாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.