Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவு. மொட்டு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் .

.

மொட்டு,சு.க.விலிருந்து சஜித் தரப்புடன் பலர் இணைவு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பல மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

பொலனறுவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான நந்தசேன ஹேரத், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான திருமதி ஆரியவதி கலப்பதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட திலிப குமார ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, களுத்துறை மாவட்டத்தில் இருந்து மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனில் குமார விஜேசிங்ஹ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

அவ்வாறே, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ரெஹென்சிறி வராகொட மற்றும் களுத்துறை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்ன விதானகே ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.