Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கச்சதீவு விவகாரத்தால் பா.ஜ.க கூட்டணிக்குள் அதிருப்தி: மோடியின் தேர்தல் அறிக்கையால் ஏற்பட்ட சிக்கல்.

ஆளும் கட்சியான பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

கச்சதீவு விவகாரத்தால் பா.ஜ.க கூட்டணிக்குள் அதிருப்தி: மோடியின் தேர்தல் அறிக்கையால் ஏற்பட்ட சிக்கல்.

 

இந்தியாவில் தற்போது தேர்தல் பிரசாரங்கள் பரபரப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, கச்சத்தீவு மீட்பு குறித்த அம்சம் தேர்தல் அறிக்கையில், இடம்பெறாத நிலையில், தமிழக பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தேர்தல் அறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் நேற்று டில்லியில் வெளியிட்டனர். இதன்பேதே அறிக்கையில் கச்சதீவு விவகாரம் குறிப்பிடப்படவில்லை என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும், கச்சதீவு மீட்புத் தொடர்பில் அண்மையில் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே தேர்தல் அறிக்கை தொடர்பில் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மத்திய காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது.கச்சத்தீவை தி.மு.க அரசு தாரை வார்த்தது குறித்த விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெற்று, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் கச்சதீவு மீட்பு தொடர்பில் குறிப்பிடவில்லை என்றாலு, கடலோர உள்கட்டமைப்பு திட்டம் வாயிலாக தீவுகளை உலகளாவிய சுற்றுலா தலமாக மேம்படுத்துவோம் என்ற, வாக்குறுதி இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.