Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தந்தை இழந்த நிலையில் சாதித்து காட்டிய யாழ் மாணவி!

,

2025-ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio-Technology) யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.  கிஷானி யாழ். மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27-வது இடத்தையும் பெற்றுத் தனது கல்லூரிக்கும் தீவகப் பகுதிக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளார்.

கிஷானியின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு பெரும் கண்ணீர் கதை ஒளிந்துள்ளது. அவர் 10 மாதக் குழந்தையாக இருந்தபோதே, கடற்றொழிலுக்குச் சென்ற அவரது தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.  தந்தையற்ற நிலையில், கூலித் தொழில் செய்து பல இன்னல்களுக்கு மத்தியில் கிஷானியை அவரது தாயார் படிக்க வைத்துள்ளார். நிம்மதியாக அமர்ந்து படிக்க ஒரு முறையான வீடு கூட இல்லாத நிலையிலும்,வறுமையைத் தனது கல்விக்குத் தடையாகக் கருதாமல் கிஷானி இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

கிஷானியின் இந்த வெற்றியானது, கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தச் சூழலிலும் சாதிக்கலாம் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது.
வாழ்த்துக்களை தெவித்து நிற்கின்றோம்.