Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சைலன்சர்க்குள் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்'..

விமான நிலையத்தில் சிக்கிய நபர்!

சைலன்சர்க்குள் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்'.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 
சந்தேகநபர் நேற்று மதியம் தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். 

அவர் எடுத்து வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 சைலன்சர்களுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 
அந்த சைலன்சர்களுக்குள் இருந்து 25 கிலோ 500 கிராம் எடையுள்ள 'குஷ்' மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான "சிவப்பு வழி" ஊடாக இந்த போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே சந்தேகநபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.