Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இலங்கையில் வங்கித்துறையில் ரூபா 13.2 பில்லியன் மோசடி..!

மோசடியுடன் தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் கணினி அணுகல் வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை நேஷனல் டெவலப்மெண்ட் வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானதை அடுத்து, கொழும்பு பங்குச் சந்தையில் அந்த வங்கியின் பங்குப்பரிமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த மோசடியின் அளவு குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், வங்கியின் உள்ளக விசாரணைகளின் மூலம் இது 13.2 பில்லியன் ரூபாய் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் கணினி அணுகல் வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், சட்ட அமலாக்கத்துறையினரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வளவு பெரிய தொகை மோசடி செய்யப்பட்டிருந்தாலும், வங்கியின் வாடிக்கையாளர்களின் வைப்புப்பணம் மற்றும் மீதிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கி நிர்வாகம் மிகத்தெளிவாக உறுதியளித்துள்ளது.

இந்த நிதியிழப்பு காரணமாக 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு சுமார் 4.0 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கியின் மொத்த சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் இது 0.7 சதவீதமே என்பதால், வங்கியின் நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளதுடன், பங்குதாரர்களுக்கு வழங்கப்படவிருந்த ரொக்க லாபப்பங்கீடுகளை (Cash Dividends) உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வங்கியின் கிளைகளை விரிவாக்கம் செய்வதற்கும், ஏனைய தேவையற்ற செலவுகளை மேற்கொள்வதற்கும் மத்திய வங்கி தற்காலிகத் தடையை விதித்துள்ளது. ஒரு சுயாதீன கணாய்வு நிறுவனத்தின் மூலம் இந்த மோசடி எவ்வாறு நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளது. வங்கியின் அன்றாட நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி தொடர்வதுடன், இழந்த நிதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.