பழந்தமிழகத்தில் பாண்டியர்களின் தலைநகரங்கள் நெய்தலில் அமைந்திருந்தன,
அதன் தலைநகராக ஈழத்து குதிரைமலை விளங்கியது.
பழந்தமிழகத்தில் பாண்டியர்களின் தலைநகரங்கள் நெய்தலில் அமைந்திருந்தன, மேலும் அவர்களின் அடையாளமாக மீன் சின்னமே திகழ்ந்தது. பாண்டியர்கள் எப்போதும் கடலுடன் தொடர்புடையவர்கள் ஆதலால் அவர்களுடைய கொடியின் அடையாளமும் அதனையே கொண்டிலங்கியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாண்டியர்களுடைய கடற்கலங்கள் எகிப்திய நாகரிக வணிகத்திற்கு முன்னோடிகளாக திகழ்ந்தார்கள்.
கி.மு 10 இல் யூத அரசனான சாலமன் இந்த பாண்டியர்களுடைய வணிக பொருட்களை பெருமளவு பெற்றுக் கொண்டதற்கு விவிலிய பழைய ஏற்பாட்டில் நிறைய தகவல்கள் காணப்படுகின்றன. அந்த பாண்டிய அரசுக்கு ஓர் பெண் அரசியாக வீற்றிருந்து அரசோச்சியதாக அவை கூறுகின்றன. அதன் தலைநகராக ஈழத்து குதிரைமலை விளங்கியது. இத்தகைய பாண்டியர்களுடைய வீழ்ச்சிக்கு பின்பாகவே சேரர்களுடைய ஆதிக்கம் மேலெழுந்தது. அவர்களுடைய வணிக கப்பல்களும் இந்த கடல் வணிகத்தில் குதித்தன. அது கிரேக்க, உரோம நாகரிக காலங்களிலாகும்.
மேலும் பாண்டி என்றால் பண்டைய மாபெரும் வணிகக் கப்பல் என்று பொருள். இந்தக் கப்பலின் உரிமையாளர்கள் பொதுவாக பாண்டியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களை ஏனையோர் பாண்டு என்றும் விளித்தனர். இவர்களே உலகின் முதற் கடற்கலங்களை கட்டமைத்தவர்கள். உலகின் முதற் கடலோடிகளும் இவர்களேயாவர். பாண்டி என்பது சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய படகு. அதன் உரிமையாளர் பொதுவாக பாண்டியன் அல்லது பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். இந்தப் பாண்டியர்களில் சிலர் செல்வந்த மீனவர்களாகவும், கடல் பயணம் மற்றும் சரக்குப் படகுகளைச் செலுத்துவதில் வல்லுநர்களாகவும் இருந்தனர் என்ற ஒரு கருத்து உள்ளது.
பாண்டு அல்லது பண்டயா என்ற குடும்பப்பெயர், பாண்டி என்று அழைக்கப்பட்ட பெரிய படகின் உரிமையாளருக்கு முதலில் வழங்கப்பட்டது. இந்த பாண்டு வம்ச வணிகம் அவர்களை தமிழக முதல் அரச பரம்பரைக்கு வித்திட்டது. இவர்களுடைய முதன்மை வணக்க முறையாக நாக வழிபாடு திகழ்ந்தன. அந்த பண்பாட்டை தமது வணிகத்தோடு பல தேசங்களுக்கும் எடுத்துச் சென்றார்கள்.
- ஈழத்து வரலாறு


