பலதும் பத்தும். 07.04 .2026 - ஹாலிவுட் படங்கள் உங்கள் மனதைக் கெடுத்துவிட்டன - ஈரானிய தளபதி மஜித் மௌசாவி!
இலங்கையைச் சேர்ந்த நடிகை ஷாஸ்வி பாலா திடீர் மறைவு!
ஹாலிவுட் படங்கள் உங்கள் மனதைக் கெடுத்துவிட்டன - ஈரானிய தளபதி மஜித் மௌசாவி!
ஈரான் மீது அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளை அடுத்து, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கருத்து வெளியிடுகையில் , ஈரானை கற்காலத்திற்கு (Stone age) கொண்டு செல்லும் வகையில் குண்டுவீச்சு நடத்தப்படும் என எச்சரித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானிய தளபதி மஜித் மௌசாவி, ஹாலிவுட் படங்கள் உங்கள் மனதைக் கெடுத்துவிட்டன எனச் சாடியுள்ளார். "வெறும் 250 வருட கால வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு, 6,000 வருடப் பழமையான ஒரு நாகரிகத்தை அழிக்க நினைக்கிறது. ஆனால், நீங்கள் இங்கிருந்து எடுத்துச் செல்லக்கூடிய ஒரே விஷயம் உங்கள் வீரர்களின் சடலங்களை மட்டுமே" என அவர் மிகக் கடுமையாகப் பதிலளித்துள்ளார்.
15 மைல் நீளமுள்ள முக்கிய பாலத்தை சவூதி அரேபிய அவசரமாக மூடியுள்ளது.
சவூதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் 15 மைல் நீளமுள்ள முக்கிய பாலத்தை சவூதி அரேபிய அவசரமாக மூடியுள்ளது.
ஈரானுக்கு விதித்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் தொடுத்தால் அதற்கு பழிவாங்கும் முகமாக ஈரான் பிராந்தியத்தில் உள்ள முக்கிய தளங்களை அழித்தொழிக்கும் என்ற அச்சம் காரணமாகவே சவூதி அரேபியா இந்த முன்கூட்டிய நகர்வை மேற்கொண்டுள்ளது.
Middle East war
தற்போது நடைபெற்றுவரும் அமெரிக்க அதிபரின் விசேட ஊடக சந்திப்பு: "அதிபர் ட்ரம்ப்பின் எச்சரிக்கை"
ஈரானுடனான போர் மிகவும் சிறப்பாக (going well) நடப்பதாகக் கூறிய ட்ரம்ப், ஈரானை ஒரே இரவில் நிர்மூலமாக்க (take out) அமெரிக்கப் படைகளால் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காலக்கெடு:
அந்த இரவு ஒருவேளை நாளை இரவாகக் கூட இருக்கலாம்" என்று அவர் கூறியிருப்பது மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதைக் காட்டுகிறது.
பின்னணி:
ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ள நிலையில், அதை மீண்டும் திறக்க வேண்டும் அல்லது கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்கா ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்தது.
தாக்குதல்கள்:
டெஹ்ரானில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ஈரானின் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழில் திருட்டு தொடர்பாக நால்வர் கைது!
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடையில் திருடப்பட்ட மூன்று இலட்சத்து ஆறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகளையும் கலட்டி அம்மன் கோயில் பகுதி அருகில் உள்ள வீடுகளில் திருடப்பட்ட
மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் என்பன களவாடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நான்கு பேரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டனர். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான நான்கு பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த நடிகை ஷாஸ்வி பாலா திடீர் மறைவு!
இலங்கையைப் பூர்வீமாகக் கொண்டவரும், தற்போது இந்திய சீரியல், சினிமா மற்றும் விளம்பரத் துறைகளில் செயற்பட்டு வந்தவருமான, ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியத்தின் தீடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில், இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நன்கறியப்பட்டவரான அவர், பின்னர் இந்தியாவிற்கு சென்றிருந்ததுடன், பல திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரங்கள் என நட்சத்திரமாகத் திகழ்ந்து வந்தார். அத்தோடு, இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து , அங்கேயே வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர் இன்று காலை பெங்களூரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப…
யாழ்ப்பாண மண்ணில் சைவசித்தாந்த பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்
சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றுபலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
ஈரான் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக ஈரான் பாதுகாப்பு படை குற்றஞ் சுமத்தியுள்ளது. அவர் எங்கு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும்அ மைதிப் போராட்டம்!
பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் இன்று (06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி சாந்த சில்வா இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம்.
இந்த முறைமையினால் ஊழியர்கள் கடுமையாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6ம% இலாபத்தைப் பெற்றுக்கொள்கின்றன.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது தடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.இந்த விடயங்களை முன்னிறுத்தி இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பெரிய கோயில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை .
உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனை யாழ்ப்பாணம் பெரிய கோயில். (மரியன்னை தேவாலயத்தில்) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் 40 ஆவது நாளான இறுதி நிகழ்வில் இந்த உயிர்த்த ஞாயிறு திருப்பலி சிறப்பாக இடம் பெற்றது. உயிர்த்த ஞாயிறு சிறப்பாக இடம்பெற்று கல்லறை ஆண்டவரின் திருச்செல்வம் மக்கள் பாவனைக்காக வைக்கப்பட்டு இறை ஆசியும் இடம் பெற்றது. மேலும் இன்று(5) காலை திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, உயிர்த்த ஆண்டவரின் திருச்சொருபம் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு ஆசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


