Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்காக விசேட போக்குவரத்துத் திட்டம்!

தனியார் பேருந்து சேவைகளின் ஊடாக நாளாந்தம் மேலதிகமாக 800 பயணத் தடங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதற்கு இணையாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சேவைகளின் ஊடாக நாளாந்தம் மேலதிகமாக 800 பயணத் தடங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், ரயில்வே திணைக்களம் தற்போது சேவையில் ஈடுபடுத்தியுள்ள ரயில்களுக்கு மேலதிகமாக, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து விசேட ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் தமது ஊர்களுக்குச் செல்வதற்காக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு சுமார் 15 இலட்சம் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளுக்குத் தேவையான சுகாதார வசதிகள், பாதுகாப்பு, முதலுதவி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பேருந்து முனையங்களில் வழங்கப்பட்டுள்ளதுடன், விசேட பணிகளுக்காக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இக்காலப்பகுதியில் பயணிகளிடம் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக அறவிடுதல், சேவையின் தரம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களைக் கண்காணிப்பதற்காக பிரதான நுழைவாயில்களை உள்ளடக்கிய வகையில் 24 மணிநேரமும் இயங்கும் நடமாடும் பரிசோதனை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் இது தொடர்பான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை 1955 என்ற உடனடித் தொலைபேசி இலக்கம் மற்றும் 071 259 55 55 என்ற வட்ஸ்எப் இலக்கம் ஊடாகத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.